அனைவருக்கும் வணக்கம்,
இந்த இனிய தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் அனைவரையும் இந்த பதிவின் வழியாக சந்திப்பதில்
மகிழ்கிறேன். இந்த இனிய நாளில் ஒரு நல்ல பதிவாக பெண்மையை பற்றி பகிர உள்ளேன். பெண்மை
இன்றி, பெண் இன்றி, பெண்ணியம் இன்றி இவ்வுலகில் சிறு அணு கூட அறிந்திராது அன்பு என்னும்
வார்த்தையை. அதே நேரம் பெண் என்பவளை அன்பிற்கு மட்டுமே எடுத்துக்காட்டாக கூறிவிட முடியாது.
பெண் என்பவள் அன்பிற்கும் அளப்பரிய ஆற்றலுக்கும்
பண்பட்ட பண்பிற்கும், எழுச்சிமிகு வீரத்திற்கும், ஆழமான அறிவிற்கும் எடுத்துக்காட்டானவள்.
பெண் என்பவள் இவ்வுலகிற்கு
கடவுளால் கொடுக்கப்பட்ட வரம், எங்கு ஒரு பெண்ணின் பங்கு ஒரு விடயத்தில் இருக்கிறதோ
அங்கு தோல்விக்கும், தவறுக்கும், தேவையற்ற இழப்பிற்கு இடம் இருக்காது.
பெண் என்பவள் ஆழமாக
சிந்திப்பவள் மட்டும் அல்ல முன்னோக்கு பார்வையுடன் சிந்தித்து தனக்கு மட்டும் இன்றி
தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் உதவி செய்பவள்.
அவள் இன்றி அணு
கூட ஆனந்தமாக அசையுமா என்பது கேள்வி தான். இவ்வுலகில் உள்ள அணைத்து கதாபாத்திரங்களிலும்
தன்னை சரியாக பொருத்திக்கொண்டு ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு தோழியாக, ஒரு மனைவியாக,
ஒரு மருமகளாக, ஒரு தாயாக என எல்லா வித பந்தமாகவும் நம் அனைவரது வாழ்வையும் நடுநிலை
காக்கிறாள்.
தனக்காக வாழ்வதை
விட்டு தனக்கானவர்களுக்காக வாழ்வதில் தான் ஒரு உன்னைமையான வாழ்வின் அர்த்தத்தை உணர்கிறாள்.
ஒரு பெண்ணால் எப்பொழுதும் சுயநலமாக சிந்திக்கவே முடியாது. கடைசியாக, ஒன்று ,ஒரு பெண்ணால்
ஆக்கும் (உருவாக்கும் ) ஆற்றல் மட்டும் அல்ல அழிக்கும் ஆற்றலும் உண்டு என்பதை கருத்தில்
கொண்டு.
பெண்மையை போற்றுவோம்,
பெண்மையை பேணிக்காப்போம்
இனி வருகின்ற பதிவுகளில்
பெண்ணிற்கான அணைத்து விஷயங்களையும் இப்பக்கத்தில் காண்போம்.


Comments
Post a Comment