உடல் ஆரோக்கியத்தில் நேர்மறை எண்ணத்தின் பங்கு:

நமது ஒவ்வொரு மரபணுவிலும் அன்பு,
உதவும் குணம், விட்டுக்கொடுக்கும் தன்மை
என நமது ஆதி
கால முன்னோர்களால் ஆழமான
பதிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் காலப்போக்கில்
உலகமும் பண்பாடும் பழக்கவழக்கமும் மாற
மாற மனிதன் அவனுக்கே
தெரியாமல் போட்டி போடுகிறான். இது
அவனுக்கே தெரியாமல் அவனுக்குள் பொறாமை
குணத்தை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை அடியோடு அளிக்கிறது. என்னதான்
ஒருவன் போட்டி போட்டு, விட்டுக்கொடுக்காமல்,
சூழ்ச்சி செய்து வென்றாலும் அந்த
வெற்றியின் மகிழ்ச்சி சில காலம்
தான். காலம் அவன் தவறை
அவனுக்கு உணர்த்த தவறுவது இல்லை
.
மரபணுவில் உள்ள ஆழமான பதிவிற்கு எதிர்மறையாக செயல்படும் போது அவனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் குழப்பமடைகின்றன . இது நமது செல்களை அதன் பணியை செம்மையாக செய்ய தடுக்கிறது , விளைவு பல விதமான நோய்களால் மனிதன் அவதியுறுகிறான். செல் என்பது நமது உடலின் கட்டமைப்பில் செங்கல் போன்றது எனவே செல்களை மகிழ்ச்சியாக ஆரோகியமாக வைத்துக்கொள்ள நேர்மறை சிந்தனைகளால் நம் மனதை நிரப்புவோம் , நோயற்ற நிம்மதியான , ஆரோக்கியமான வாழ்வை வாழுவோம்.



Comments
Post a Comment