வெய்யில் கருமை போக்க 5 எளிய வழிகள்:
-Sripriya girikrishnan
வெயில் ஒரு மோசமான அனுபவமாகவே உள்ளது அதன் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ,வெய்யிலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்.
தயிர்:
தயிர் ஒரு அருமையான எளிய மருந்து என்றே கூறலாம். தினமும் தயிரை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வர வெய்யிலால் ஏற்பட்ட கருமை நீங்கும். இதில் உள்ள லாக்டிக் ஆசிட் மற்றும் ஆல்பா ஹைடிராக்சி ஆசிட் தோலின் கருமையை போக்கி ஒரு மென்னையான சருமத்திற்கு வழி செய்கிறது.
தக்காளி:
நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியிலா இவ்வளவு மருத்துவ குனம், ஆச்சரியப்படுகிறீர்களா ?
சந்தேகமே இல்லை தக்காளியில் உள்ள, லைகோபீன் என்னும் நிறமி உங்களை சூரிய கதிர்களால் ஏற்பட்ட சரும பாதிப்பில் இருந்து காத்து தோலின் நிறத்தை சீர் செய்கிறது. அது மட்டும் இன்றி தோலில் சூரியனால் ஏற்பட்ட தோல் சுருக்கத்தை போக்குகிறது.
பப்பாளி:
மிகவும் அருமையான சுவை மிக்க எளிதில் எங்கும் கிடைக்கக்கூடிய ஒரு பழம். இதில் உள்ள வைட்டமின் சி வெய்யிலால் ஏற்பட்ட கருமையை போக்குகிறது.மேலும் இதில் உள்ள பப்பைன் எனும் நொதி உங்களின் சருமத்தை அழகாக ஆரோகியமான வைத்திருக்க உதவுகிறது.பல காஸ்மெட்டிக் கொம்பனிகளே பப்பாளியில் உள்ள பப்பைன் ஐ கொண்டு தான் சன் ப்ரொடெக்சன் கிரீம் தயார் செய்கிறது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு ஒரு அற்புதமான ப்ளீச்சிங் தன்மையை கொண்டு உள்ளது , இதன் சாறு எடுத்து முகத்தில் தடவி வர சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு ஒரு புதிய பொலிவு கிடைக்கிறது.
சூரிய கதிர்களால் ஏற்பட்ட கருமையான தோல் உள்ள பகுதிகளில் இந்த சாறு எடுத்து பூசி வர தோல் நிறம் மாறும்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காய் சாறு எடுத்து தோல் மீது பூசி வர இதில் உள்ள இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட் வெய்யிலினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதை சார்ந்துள்ள எரிச்சலை போக்க உதவி புரிகிறது.
ஒரு நாளில் இரு முறை இந்த சாறு தடவி வர சூரியனால் ஏற்பட்ட சரும பிரச்சனை நீங்கும்.

Comments
Post a Comment